இந்தோனேசியா: முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்து

29 December 2025

இந்தோனேசியா நாட்டின் வடக்கு சுழா வாசி மாகாணம் மனெடோ பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் திடீரென நேற்று  பயங்கர தீ விபத்து ஏற்பட்டது...

இந்த முதியோர் இல்லத்தில் 30க்கும் மேற்பட்ட முதியவர்கள் வசித்து வரும் நிலையில் இந்த தீ விபத்தில் 16 முதியவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இதில் 15 பேர் படுகாயம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...