இந்தோனேசியாவின் தலைநகர் ஜெகார்தாவில் உள்ள கலபா கார்டிங் பகுதி இஸ்லாமிய வழிபாட்டு தளமான மிகப்பெரிய மசூதியில் இன்று ஏராளமான இஸ்லாமிய மதத்தினர் வழிபாடு செய்து கொண்டிருந்தபோது அங்கு திடீரென குண்டு வெடித்தது, இந்த குண்டுவெடிப்பில் அங்கிருந்த 54 பேர் படுகாயம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.