அதிவேகமாக 28,000 ரன்கள்: சச்சினின் சாதனையை முறியடித்த விராட் கோலி; இந்தியா அபார வெற்றி
11 January 2026
வதோதராவில் இன்று (ஜனவரி 11, 2026) நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் எடுத்தது. (டேரில் மிட்செல் 84, ஹென்றி நிக்கோல்ஸ் 62)
301 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணியில், விராட் கோலி அபாரமாக விளையாடி 91 பந்துகளில் 93 ரன்கள் (8 பவுண்டரி, 1 சிக்சர்) குவித்தார். துரதிர்ஷ்டவசமாக 7 ரன்களில் அவர் சதத்தை தவறவிட்டார்.
இப்போட்டியின் போது விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 28,000 ரன்களைக் கடந்தார். சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு இச்சாதனையைப் படைத்த இரண்டாவது வீரர் மற்றும் அதிவேகமாக (624 இன்னிங்ஸ்) இந்த மைல்கல்லை எட்டிய வீரர் என்ற உலக சாதனையைப் படைத்தார்.
கேப்டன் ஷுப்மன் கில் 56 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 49 ரன்களும் எடுத்து வெற்றிக்கு உதவினர். இறுதியில் கே.எல்.ராகுல் (29*) மற்றும் ஹர்ஷித் ராணா (29) ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் இந்தியா 49 ஓவர்களில் இலக்கை எட்டியது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.