மியான்மர் ராணுவ வன்முறைக்கு இந்தியா கடும் கண்டனம்

03 April 2021

மியான்மரில் நடைபெறும் வன்முறைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  இதுதொடா்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித்தொடா்பாளா் அரிந்தம் பாக்ச்சி கூறியதாவது:-


மியான்மரில் நிகழ்த்தப்படும் எந்தவொரு வன்முறைக்கு இந்தியா கண்டனம்  தெரிவித்துக்கொள்கிறது. அங்கு சட்டத்தின் ஆட்சி நிலைத்து ஜனநாயகம் மீண்டும் தழைக்க வேண்டும். அந்நாட்டில் கைது செய்யப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க இந்தியா வலியுறுத்தியுள்ளது. 


தற்போது அங்கு நிலவும் சூழலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு 10 தென்கிழக்கு ஆசிய நாடுகளை கொண்ட ஆசியான் அமைப்பின் நடவடிக்கைகள் உள்பட அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் சமமான, ஆக்கபூா்வமான முறையில் பங்களிக்கும் முயற்சியாக சா்வதேச நாடுகளுடனும், ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலுடனும் இந்தியா தொடா்பில் இருந்து வருகிறது” என்றார்.