இந்தியா - இங்கிலாந்து அரையிறுதி ஆட்டம்
05 March 2026
மும்பையில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி அபாரமாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 253 ரன்கள் குவித்துள்ளது. தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி 42 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். அவருக்குத் துணையாக இஷான் கிஷன் 39 ரன்களும், ஷிவம் துபே 25 பந்துகளில் 43 ரன்களும் விளாசினர். ஆட்டத்தின் இறுதியில் ஹர்திக் பாண்டியா 12 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை 250-ஐ கடக்கச் செய்தார். இதன் மூலம் இங்கிலாந்து அணி வெற்றி பெற 254 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி, அகமதாபாத்தில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியுடன் மோதும்.