யு19 உலகக் கோப்பை: இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி - 6-வது முறையாகச் சாம்பியன் மகுடம்
06 February 2026
ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேயில் நடைபெற்ற 16-வது இளையோர் (யு19) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில், இங்கிலாந்து அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 411 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.
இந்திய அணியின் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி 80 பந்துகளில் 175 ரன்கள் (15 பவுண்டரி, 15 சிக்ஸர்கள்) குவித்து அசத்தினார். கேப்டன் ஆயுஷ் மாத்ரே 53 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து 412 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 40.2 ஓவர்களில் 311 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இங்கிலாந்து தரப்பில் காலேப் பால்கனேர் 115 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய இளையோர் அணி 6-வது முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.