6 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தொடக்கம்: தில்லி - ஷாங்காய் இடையே ஏர் இந்தியா நேரடி விமான சேவை

01 February 2026

இந்தியா மற்றும் சீனா இடையே கடந்த 2020-ஆம் ஆண்டு நிறுத்தப்பட்ட நேரடி விமான சேவையை, சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் தொடங்கியுள்ளது.


சீனாவின் ஷாங்காய் மாநகரின் புடோங் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 230 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787 ரக விமானம் இன்று (பிப்ரவரி 1) காலை புது தில்லியை வந்தடைந்தது.


இரு நாடுகளுக்கும் இடையிலான மக்கள் தொடர்பு, வணிகம், கல்வி மற்றும் நிறுவன ரீதியான உறவுகளை மேம்படுத்த இந்த நேரடி விமான சேவை முக்கியப் பங்காற்றும் என்று இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே நிலவிய பயணக் கட்டுப்பாடுகளுக்குப் பிறகு, இந்த விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க மைல்கல்லாகக் கருதப்படுகிறது.