அபாரமாக ஆடிய இந்திய அணி வெற்றி

06 November 2025

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் நான்காவது ஆட்டம் கோல்டு கொஸ்ட்டில் உள்ள கரரா ஓவல் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தது. இதில் 167 ரன்களை எடுத்த இந்திய அணி எட்டு விக்கெட்டுகளை இழந்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 18.2 ஓவர்களில் 119 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.