அமீரகத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 6 பேர் பலி 2,279 பேர் குணமடைந்தனர்

05 April 2021

அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 2 லட்சத்து 60 ஆயிரத்து 445 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில். 2 ஆயிரத்து 113 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 70 ஆயிரத்து 136 ஆக உயர்ந்தது.

இதில் நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 ஆயிரத்து 279 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதன் காரணமாக தற்போது குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 54 ஆயிரத்து 600 ஆக அதிகரித்துள்ளது.கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று ஒரே நாளில், 6 பேர் பலியானார்கள். இதனால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,510 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 14 ஆயிரத்து 26 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைபவர்களின் விகிதம் அதிகரித்து வருவதை தொடர்ந்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.