தமிழகம் தலைநிமிர; தமிழனின் பயணம்' யாத்திரை
12 October 2025
மதுரை:
'தமிழகம் தலைநிமிர; தமிழனின் பயணம்' யாத்திரை மதுரையில் எழுச்சியுடன் தொடக்கம்! பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்தார்!
ஐ.ஜே.கே.வின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை இலக்காகக் கொண்டு, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களின் தலைமையில் 'தமிழகம் தலைநிமிர; தமிழனின் பயணம்' என்ற தேர்தல் பரப்புரை யாத்திரை இன்று (அக்டோபர் 12, 2025) மதுரையில் கோலாகலமாகத் தொடங்கியது.
மதுரையின் அண்ணாநகர் அம்பிகா தியேட்டர் சந்திப்பு பகுதியில் நடைபெற்ற இந்த யாத்திரைத் தொடக்க நிகழ்வில், பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சியான ஐ.ஜே.கே.வின் (இந்தியா ஜனநாயக கட்சி) சார்பில் முக்கிய மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
ஐ.ஜே.கே.வின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு:
ஐ.ஜே.கே.வின் சார்பில் மாநிலப் பொதுச் செயலாளர் சண்முகம், துணைப் பொதுச் செயலாளர் அனந்த முருகன், மாநில அமைப்புச் செயலாளர் இருதயராஜ், மாநில துணை அமைப்புச் செயலாளர் L. பிரபுராஜா, மாவட்டப் பொருளாளர் வினோத்குமார், மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டி, மாவட்ட இணைத் தலைவர் A. மனோகரன், மாவட்ட துணைச் செயலாளர் காளிராஜ், மதுரை மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் R. ராஜகணபதி, உசிலம்பட்டி வடக்கு ஒன்றியத் தலைவர் P. செல்லப்பாண்டி ஆகியோர் உட்பட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
இந்த யாத்திரைத் தொடக்க நிகழ்வில் பேசிய மாநிலத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்கள், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் தமிழக மக்களின் முன்னேற்றத்துக்கான எதிர்காலத் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். அவர், யாத்திரையில் பங்கேற்ற பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்களிடையே எழுச்சியூட்டும் வகையில் உரையாற்றினார்.
ஐ.ஜே.கே. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்கள் கட்சி கொடிகளுடன் வந்து யாத்திரையைச் சிறப்பித்து, கூட்டணி பலத்தை வெளிப்படுத்தினர். இந்த யாத்திரை அடுத்த சில வாரங்களுக்கு தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களில் தொடர்ந்து நடைபெற உள்ளது.