ஐஏஎஸ் அதிகாரி சென்ற கார் விபத்து: அதிகாரி உயிரிழப்பு

26 November 2025

கர்நாடக மாநில கனிமவளத்துறை நிர்வாக இயக்குனராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி மகாந்தேஸ் பிலாகி செயல்பட்டு வந்தார்.

நிலையில் ஐஏஎஸ் அதிகாரி மகாந்தேஸ் நேற்று தனது உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு செல்வதற்காக காரில் விஜயபுரத்தில் இருந்து களபுரகி நோக்கி சென்று கொண்டிருந்தார். மேலும் அவருடன் அவருடைய உறவினர்கள் மூன்று பேர் பயணித்தனர். இந்நிலையில் களபுரகி மாவட்டம் கவுனகில் பகுதியில் கார் சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கார் சாலை நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஐஏஎஸ் அதிகாரி மகாந்தேஷ் பிலாகி உள்பட காரில் பயணித்த மூன்று பேரும் படுகாயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்....