மாரடைப்பை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் என்னென்ன?

07 September 2020

உலக சுகாதார அமைப்பின் படி உலக அளவி; 17 மில்லியன் மக்கள் இதயம் தொடர்பான பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர். அதில் 3 மில்லியல் மக்கள் மாரடைப்பால் இறக்கின்றனர். சமீபத்திய தகவலின்படி இந்தியாவில் இளைஞர்களும் தற்போது மாரடைப்பால் பாதிக்கப்படுகின்றனர்.

ஆனால் அதை சில வாழ்க்கை முறைப் பழக்கங்களால் குறைக்கலாம் என்கிறனர் வல்லுநர்கள். எப்படி..? 

உடற்பயிற்சி : ஆரோக்கியமான உடலுக்கு ஒரு வாரத்திற்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டுமாம். இதற்கு உடற்பயிற்சிதான் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. நடைபயிற்சி செய்யலாம். டென்னிஸ், பேட்மிண்டன் போன்ற விளையாட்டுகளை விளையாடலாம். ஆனால் ஏதாவதொரு கடின உழைப்பு உடலுக்குத் தேவை. 

உணவு முறையில் மாற்றம் : புரதச்சத்து நிறைந்த உணவுகள். பழங்கள், காய்கறிகள், நட்ஸ், தானிய வகைகள் போன்றவற்றை அதிகம் சாப்பிடுங்கள். கொழுப்பு நிறைந்த உணவுகளை முற்றிலும் தவிறுங்கள். ஆய்விலும் நீங்கள் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தை தவிர்த்தாலே இதயம் ஆரோக்கியமாக இருக்கும் என்கின்றனர். 

புகைபிடிக்க நோ : புகைப்பழக்கம் உடல் நலத்திற்குக் கேடு என்பது அனைவரும் அறிந்ததே. ஏனெனில் இந்த புகைப்பழக்கம் இரத்த ஓட்டத்தை உறைய வைக்கும். எனவே இதயம் இரத்த ஓட்டமின்றி இயங்கும்போது மாரடைப்பு உண்டாகும். 

மன அழுத்தத்தை கையாளக் கற்றுக்கொள்ளுங்கள் : மன அழுத்தம் இதயத்திற்கான அழுத்தத்தையும் அதிகரிக்கும். அது இதயத்திற்கு முற்றிலும் நல்லதல்ல.தேவையற்ற சிந்தனைகளை ஓட விடாமல் மகிழ்ச்சியுடன் இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். எதையும் சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல் அவ்வளவுதானே....பரவாயில்லை என கடந்து செல்லுங்கள். 

இதயம் தொடர்பான பாதிப்புகளை அறிந்துகொள்ளுங்கள் : இதயம் தொடர்பான பிரச்னைகள், பாதிப்புகளை முற்றிலும் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். இதயத்திற்கு எது நல்லது , நல்லதல்ல என்பதை மருத்துவரிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். அதை முறையாகப் பின்பற்றி வாருங்கள்.