குளிர்காலத்தில் வெதுவெதுப்பான நீர் பருகலாமா???

28 November 2025

மழைக்காலம் என்றாலே நம் உடலை முதலில் பாதிப்பது சளி போன்ற பிரச்சனைகள் தான். இந்த மழைக்காலத்தில் நாம் என்னதான் நம் உடலை நன்கு பார்த்துக் கொண்டாலும் வானிலை மாற்றங்கள் மற்றும் பருவகால மாற்றங்கள் காரணமாக நம் உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து சளி காய்ச்சல் உள்ளிட்ட பிரச்சனைகள் வருவது வழக்கம். 

இந்த நேரங்களில் நாம் உடலுக்கு சத்தான உணவுப் பொருட்களை உட்கொள்வது மட்டுமல்லாமல் வெதுவெதுப்பான நீர் குடிப்பது நல்லது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 

இந்த வெதுவெதுப்பான நீர் குடிப்பதன் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். குறிப்பாக குளிர்காலங்களில் வெதுவெதுப்பான நீர் குடிக்கும் போது நம் உடலில் உள்ள நச்சுக்கள் சுத்தமாகி சளி ஏற்படுத்தும் நோய் தொற்று கிருமிகள் அழியும். 

மேலும் வெதுவெதுப்பான நீர் குடிப்பதால் செரிமானம் மேம்படும். அதேபோன்று குளிர்ந்த நீரை விட வெதுவெதுப்பான நீர் அதிக நீரேற்றத்துடன் இருக்க உதவுகிறது. இந்த நேரங்களில் வெதுவெதுப்பான நீரில் குளிப்பதும் நல்லது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். குறிப்பாக குழந்தைகளுக்கு சளி போன்ற பிரச்சனைகள் அடிக்கடி ஏற்படாமல் இருக்க மேலும் தோல் ஆரோக்கியத்திற்கும் இந்த வெதுவெதுப்பான நீர் பயனுள்ளதாக இருக்கும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்....