பாகிஸ்தானில் நில விவகாரத்தில் இந்து விவசாயி சுட்டுக்கொலை - 2 பேர் கைது

11 January 2026

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள தல்ஹர் கிராமத்தில், கைலாஷ் கோஹ்லி (23) என்ற இளம் இந்து விவசாயி நில உரிமையாளரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.


நில உரிமையாளர் சர்ஃபராஸ் நிஸாமனிக்கு சொந்தமான நிலத்தில் கைலாஷ் கோஹ்லி குடிசை அமைக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனை விரும்பாத நில உரிமையாளர், அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.


இந்தத் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த கைலாஷ் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த நில உரிமையாளர் சர்ஃபராஸ் நிஸாமனி மற்றும் அவருக்கு உதவிய ஜஃபருல்லா கான் ஆகிய இருவரைப் போலீஸார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்தும், நீதி கோரியும் மனித உரிமைக் குழுக்கள் மற்றும் இந்து சமூகத்தினர் பாகிஸ்தானில் போராட்டங்களை நடத்தி வந்தனர். தற்போது குற்றவாளிகள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.