இந்தியா-நேபாளம் எல்லையில் அமைந்துள்ள இமயமலையில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் மலையேறும் சாகசத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் திடீரென இன்று பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. நேபாளத்தின் டொலகா மாவட்டத்தில் இருந்து சென்ற மலையேற்ற வீரர்கள் யலொங் ரி சிகரத்தில் முகாமிட்டு தங்கி இருந்தனர். இந்த முகாமில் இருந்தபோது இந்த பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. காரணமாக இந்த பனிச்சரிவில் மலையேற்ற வீரர்கள் சிக்கிக் கொண்டு ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நான்கு பேர் பனி சரிவில் சிக்கி மாயமாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து மாயமானவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.