பள்ளி மைதானத்தில் அவசரமாகத் தரையிறங்கிய ஹெலிகாப்டர்

11 February 2026

மும்பையின் ஜூகு பகுதியில் இருந்து குஜராத் மாநிலம் சூரத் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பயிற்சி ஹெலிகாப்டர், நடுவானில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள வித்யா வைபவ் உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.


இந்த ஹெலிகாப்டரில் விமானி, பயிற்சி விமானி மற்றும் பொறியாளர் உட்பட மொத்தம் நான்கு பேர் இருந்தனர். மைதானத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொழில்நுட்ப வல்லுநர்கள் கோளாறைச் சீரமைத்தனர்.


சுமார் 40 நிமிடங்களுக்குப் பிறகு கோளாறு சரிசெய்யப்பட்டு, ஹெலிகாப்டர் மீண்டும் மும்பை நோக்கிப் புறப்பட்டுச் சென்றது. இந்தச் சம்பவத்தின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பள்ளி மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.