அனுமன் ஜெயந்தி தினத்தை ஒட்டி திருவள்ளூர் பெரிய குப்பம் தேவி மீனாட்சி நகர் பகுதியில் அமைந்துள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் இன்று பல்வேறு பூஜைகள் மற்றும் மந்திர யாகம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.
இதனை ஒட்டி 32 அடி உயரம் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்ற நிலையில் காலையிலேயே மங்கள இசை உடன் நிகழ்ச்சி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மூல மந்திரி யாகம் நடைபெற்று தொடர்ந்து தங்க கவசம் அணிந்து பல்வேறு மலர்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சுவாமிக்கு 73 ஆயிரம் வடைகளால் செய்யப்பட்ட மாலைகள் சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இந்த சிறப்பு பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.