டெல்லி காவல்துறையினர் இன்று ஒரு வீட்டில் சொத்துக்களை பறிமுதல் செய்வது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றுவதற்காக சென்றனர். அப்போது அங்கு அந்த வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.
மேலும் நீண்ட நேரம் ஆகியும் போலீசார் கதவை தட்டியா யாரும் திறக்கவில்லை. பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு அனுராதா கபூர் என்பவர் மற்றும் அவருடைய மகன்கள் ஆசிஷ் கபூர், சைதன்ய கபூர் ஆகிய மூன்று பேரும் மின்விசிறியில் தூக்கல் தொங்கிய நிலையில் சடலமாக இருந்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரித்த போது அவர்கள் மன உளைச்சலில் இருந்துள்ளதாகவும் இதனால் இந்த விபரீத முடிவு எடுத்துள்ளதாகவும் தெரிய வந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது....