தலைமுடி அடர்த்தியாகணுமா... இத பண்ணுங்க...

02 September 2020

கற்றாழை அழகுக்குறிப்பில் முக்கியமான ஒன்று. தலைமுடி பராமரிப்பில் இதைவிட எளிய குறிப்பு இருக்கவே முடியாது. ஏனெனில் தலைமுடிக்குத் தேவையான ஊட்டச்சத்துகள், மினரல், வைட்டமின்கள் என அனைத்தும் இதில் உள்ளன.

இதனால் தலைமுடி வேர்களை உறுதியாக்கி அதன் வளர்ச்சியையும் தூண்ட உதவுகிறது. எனவே இதில் தலைக்கு தேய்கும் எண்ணெயை தயாரித்து வைத்துக்கொண்டால் தேவைப்படும்போதெல்லாம் தடவி மசாஜ் செய்து கொள்ளலாம். இதனால் அடர்த்தியான தலைமுடியைப் பெறலாம். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :
கற்றாழை
தேங்காய் எண்ணெய் 

செய்முறை :
ஒரு கப் தேங்காய் எண்ணெய் எனில் அரைக்கப் கற்றாழை என எடுத்துக்கொள்ளுங்கள். கற்றாழை சதைகளை நன்கு மசித்துக்கொள்ளுங்கள்.

பாத்திரம் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ச்சுங்கள். சூடானதும் மசித்த கற்றாழையை சேர்த்து கிளறுங்கள்.

நன்கு கிளற கற்றாழை குழைந்து எண்ணெயுடன் கலந்துவிடும். பின் அடுப்பை அணைத்து சூடு முற்றிலும் தணிய ஆற வையுங்கள். இறுதியாக ஒரு டப்பாவில் வடிகட்டி ஊற்றி வைத்துக்கொள்ளுங்கள்.

தேவைப்படும்போதெல்லாம் தலையில் தேய்த்து மசாஜ் செய்துகொள்ளுங்கள். வாரம் இரு முறை இந்த எண்ணெய்யில் மசாஜ் செய்துவிட்டு தலைக்குக் குளிப்பதாலும் நல்ல பலனை பெறலாம்.