துப்பாக்கியை சுத்தம் செய்த போது காவலர் மீது குண்டு பாய்ந்து உயிர் இழப்பு

22 November 2025

ஜார்க்கண்ட் மாநிலம் டீயோகர் மாவட்டம் மோகன்பூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த ஹல்வேந்தர் சிவபூஜன் பால் (30) இன்று காலை காவல் பயிற்சி மையத்தில் சக போலீசார் உடன் இணைந்து தனது துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது துப்பாக்கி எதிர்பாராத விதமாக திடீரென வெடித்ததில் துப்பாக்கில் இருந்து வெளியேறிய குண்டு ஹல்விந்தரின் தலையில் பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்த தகவலின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்....