அமெரிக்க விண்வெளி படைக்காக மேம்பட்ட ஜி.பி.எஸ். செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது ஸ்பேஸ் எக்ஸ்

29 January 2026

எலான் மஸ்க்கின் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம், அமெரிக்க விண்வெளி படைக்காக GPS III-9 என்ற அதிநவீன ஜி.பி.எஸ். செயற்கைக்கோளை பால்கன்-9 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது. புளோரிடாவின் கேப் கனவரல் ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்ட இந்த செயற்கைக்கோள், சுமார் 90 நிமிடங்களில் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. ஏவுதலுக்குப் பிறகு ராக்கெட்டின் முதல் பகுதி அட்லாண்டிக் கடலில் உள்ள கப்பலில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. ஜி.பி.எஸ் III வரிசையில் மொத்தம் 10 செயற்கைக்கோள்களை நிலைநிறுத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இதுவரை 9 செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டுள்ளன. இந்த வரிசையின் கடைசி செயற்கைக்கோள் இந்த ஆண்டின் இறுதியில் விண்ணில் ஏவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.