முகப்பு விருப்ப பணியிட மாற்றம் குறித்து கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களிடம் ஜெயகுமார் IPS மாவட்ட கண்காணிப்பாளர் கேட்டறிந்தார்.
விருப்ப பணியிட மாற்றம் குறித்து கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களிடம் ஜெயகுமார் IPSமாவட்ட கண்காணிப்பாளர் கேட்டறிந்தார் .
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
S. ஜெயக்குமார் IPS தலைமையில்,
பணி மாறுதல் குழுவினர் முன்னிலையில் கடலூர் மாவட்டம் மதுவிலக்கு அமல்பிரிவில் ஓராண்டு காலம் பணி முடித்த காவலர்களுக்கும், மதுவிலக்கு அமல் பிரிவில் பணிபுரிய விருப்பமுள்ள காவலர்களின் பணியிட மாற்றம் வழங்குவது சம்பந்தமாக இன்று ஆயுதப்படை மைதானத்தில் ஒவ்வொரு காவலர்களிடமும் பணிபுரிய விரும்பும் காவல் நிலையங்களை கேட்டு அறிந்து கவுன்சிலிங் முறையில் 53 காவலர்களை மதுவிலக்கு அமல் பிரிவிற்கும், மதுவிலக்கு அமல் பிரிவில் பணியாற்றிய 56 காவலர்களை காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆணை பிறப்பித்தார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர்
N கோடீஸ்வரன் ரகுபதி, துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் ரூபன்குமார் அப்பாண்டைராஜ், மாவட்ட காவல் அலுவலக நிர்வாக அலுவலர் வேல்முருகன், ஆகியோர் உடன் இருந்தனர் .
கொற்றவை செய்திகளுக்காக செய்தியாளர்
P .ஜெகதீசன்