பல பிரச்சனைகளை தீர்க்கும் நெல்லிக்காய்

24 November 2025

தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் பயன்கள் என்னென்னவென்று உங்களுக்கு தெரியுமா? 

நெல்லிக்காயை நாம் தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் முடி நன்கு வளரும். அதுமட்டுமின்றி உடல் எடை குறைப்பிற்கு இந்த நெல்லிக்காய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் சருமத்திற்கு சிறந்த ஆரோக்கியத்தை தரும். 

நெல்லிக்காயில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் நிறைந்துள்ளதால் புற்றுநோய் ஏற்படுவதை தவிர்க்கும். நெல்லிக்காய் சாப்பிடுவதால் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி தடைபடும் என ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

மேலும் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு நெல்லிக்காய் ஒரு சிறந்த மருந்தாகும். இதனால் குடல் இயக்கம் சீராகும். மேலும் மலச்சிக்கல் பிரச்சனையும் சரியாகும். 

உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருப்பவர்கள் நெல்லிக்காய் தினமும் சாப்பிட்டு வரும்போது உயர் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்கும். நெல்லிக்காயை அப்படியே சாப்பிடுவது மட்டுமல்லாமல் நெல்லிக்காய் ஜூஸ் அல்லது நெல்லிக்காய் பொடி யாகவும் எடுத்துக் கொள்ளலாம்.