18 சவரன் தங்க நகைகளை திருடிய இரண்டு பேர் கைது

02 December 2025

திருச்செந்தூர் அருகே உள்ள காந்திபுரத்தைச் சேர்ந்த இசை வனத்துறை என்பவர் ராணுவத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் விடுமுறைக்காக அவர் சொந்த ஊருக்கு வந்திருந்தார். 

இவர் கடந்த 26 ஆம் தேதி தனது உறவினரின் திருமணத்திற்காக வெளியூருக்குச் சென்ற அவர் தனது பையில் 18 சவரன் நகைகளை வைத்து வீட்டின் அருகில் உள்ள தரைப்பாளத்தில் வைத்து விட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது பை காணாமல் போயிருந்தது தெரிய வந்தது. இது குறித்து அவர் திருச்செந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

மேலும் திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ் குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் இன்னோஸ் குமார் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது. இந்த விசாரணை முடிவில் நகைகளை கூரந்தான்விளை பகுதியைச் சேர்ந்த வாசகன் மற்றும் அவருடைய நண்பர் விஜயகுமார் ஆகியோர் திருடியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவர்கள் இரண்டு பேரையும் நேற்று கைது செய்து 18 சவரன் தங்க நகைகளை மீட்டனர்...