இன்று மாலை சரிவடைந்த தங்கத்தின் விலை

24 October 2025

கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை உச்சத்தை அடைந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று விலை குறைந்த கிராம் பதினோராயிரத்து ஐநூறு ரூபாய்க்கு விற்கப்பட்டது. மேலும் இன்று காலை தங்கத்தின் விலை 40 ரூபாய் அதிகரித்து கிராமுக்கு 11,540 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதேபோன்று சவரனுக்கு 92,320 ரூபாய்க்கு விற்பனையானது. காலையில் அதிகரித்து இருந்த தங்கத்தின் விலை மாலை சவரனுக்கு 1120 ரூபாய் குறைந்து 92,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதேபோன்று கிராமுக்கு 140 ரூபாய் குறைந்து 11400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதேபோன்று வெள்ளி விளையும் ஒரு கிராம் 170 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.