மீண்டும் ஒரு லட்சத்தை தொட்ட தங்கத்தின் விலை

22 December 2025

தங்கத்தின் விலை மீண்டும் ஒரு லட்சத்தை தொட்டதால் நகைப்பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

தங்கத்தின் விலை கடந்த 12ஆம் தேதியிலிருந்து ஏற்றம் கண்டது. இந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி சவரனுக்கு 1160 ரூபாய் உயர்ந்து சவரன் ஒரு லட்சத்து 120 ரூபாய்க்கு விற்பனையானது. 

இதனைத் தொடர்ந்து இன்று காலை தங்கத்தின் விலை ஒரு சவரன் 99 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கிராம் 12,480 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 

ஆனால் பிற்பகலில் இரண்டாவது முறையாக தங்கத்தின் விலை உயர்ந்தது. அதன்படி சவரனுக்கு 720 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிராமுக்கு 90 அதிகரித்து 12,570 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது வரலாறு காணாத புதிய உச்சம் என்பது குறிப்பிடத்தக்கது...