இனிமே தங்கம் வாங்கவே முடியாதா? ஒரு லட்சத்தை தாண்டிய தங்கத்தின் விலை... நகை பிரியர்கள் அதிர்ச்சி

15 December 2025

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்று கொண்டே தான் இருக்கிறது.

இருப்பினும் இன்றைய உயர்வு ஒரு புதிய உச்சம் என்றே சொல்லலாம். முன்னதாக கடந்த 12ஆம் தேதி தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டு ஒரு கிராம் 12,370 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் 98960 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை தங்கத்தின் விலை உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்தை நெருங்கி வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது...

அதன்படி இன்றைய தங்கத்தின் விலை சவரனுக்கு 720 ரூபாய் அதிகரித்து சவரன் 99 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் ஒரு கிராம் 12,460 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இந்த நிலையில் பிற்பகலில் மீண்டும் தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து சவரனுக்கு 440 அதிகரித்து ஒரு சவரன் 1,00,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் கிராமுக்கு 55 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 12,515 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இப்படி ஒரு சூழ்நிலையில் நடுத்தர மக்களே தங்கத்தை வாங்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.. அவர்களுக்கே இந்த நிலை என்றால் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் அல்லது ஏழ்மையான மக்கள் தங்கத்தை தனது வாழ்நாளில் நினைத்தே பார்க்க முடியாதோ என்ற அச்சம் மக்கள் மனதில் எழுந்துள்ளது...