தமிழகத்தில் தங்கத்தின் விலை கடந்த 17ஆம் தேதி புதிய உச்சத்தை தொட்டது. இதனைத் தொடர்ந்து படிப்படியாக விலை குறைய தொடங்கியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சவரனுக்கு 3 ஆயிரம் ரூபாய் குறைந்து விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் விலை நேற்று மீண்டும் உயர்ந்தது. அதன்படி நேற்று ஒரு சவரன் தங்கத்தின் விலை 90600 க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் கிராமுக்கு 11,325 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது. குறிப்பாக தங்கத்தின் விலை சவரனுக்கு 1800 ரூபாய் குறைந்து 88 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதேபோன்று கிராமுக்கு 225 ரூபாய் குறைந்து 11,100 க்கு விற்பனை செய்யப்படுகிறது.