தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை உச்சத்தை அடைந்துள்ளது. குறிப்பாக நேற்று தங்கம் விலை முதன்முறையாக ஒரு சவரன் 94 ஆயிரம் ரூபாயை தாண்டி வரலாறு படைத்துள்ளது என்றே கூறலாம்.
நேற்று முன்தினம் ஒரு கிராம் 11 ஆயிரத்து 580 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஆபரண தங்கம் நேற்று 245 ரூபாய் அதிகரித்து கிராமுக்கு 11,825 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் இன்று ஆபரண தங்கம் விலை கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 11,860 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோன்று சவரனுக்கு 280 உயர்ந்து 94 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்வது நடுத்தர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....