ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் 1680 ரூபாய் அதிகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி சென்னையில் இன்று ஆபரண தங்கம் காலையில் சவரனுக்கு ரூபாய் 880 ரூபாய் உயர்ந்தது அதேபோல மாலையில் 800 ரூபாய் உயர்ந்தது.
அந்த வகையில் தமிழகத்தில் நேற்று முன்தினம் ஆபரண தங்கம் கிராம் 12820 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் சவரன் ஒரு லட்சத்து 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை காலை சவரனுக்கு 880 அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. மேலும் ஒரு கிராம் 13 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இதேபோன்று மாலையிலும் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 100 என்ற சதவிகிதத்தில் சவரனுக்கு இன்னொரு ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 13,100 ஆகவும் ஒரு சவரன் ₹ 1,4,800 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.
இதன் மூலம் இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு 1680 ரூபாய் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது...