தங்கத்தின் விலை கடும் உச்சத்தை தொட்டுள்ளது என்று கூறலாம். தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வந்து கொண்டே இருந்த நிலையில் நேற்றைய நிலவரப்படி தங்கம் விலை ஒரு கிராமுக்கு 11,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஆனால் இன்று சென்னையில் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு 300 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 12,200 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு சவரனுக்கு ரூபாய் 97 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. இதனால் நகை வாங்குபவர்கள் நகை பிரியர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இவ்வாறு தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டே செல்வதால் நடுத்தர மக்கள் தங்கமே வாங்க முடியாத சூழல் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சமும் நிலவுகிறது.