மாற்றுத்திறனாளி சிறுமிக்கு நேர்ந்த கொடுமை

06 January 2026

ஒடிசா மாநிலத்தில் மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மூன்று நபர்களை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.



ஒடிசா மாநிலம், ராயகடா மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவர், நேற்று மதியம் தனது கிராமத்திற்கு அருகிலுள்ள வனப்பகுதிக்கு விறகு சேகரிக்கச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், அந்த சிறுமியை வழிமறித்து வனப்பகுதிக்குள் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.



பாதிக்கப்பட்ட சிறுமி வீட்டிற்குச் சென்று தனது தாயிடம் நடந்த கொடுமையைக் கூறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தாய் உடனடியாக உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், தலைமறைவாக இருந்த 3 குற்றவாளிகளையும் இன்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மூன்று பேரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு மற்றும் விசாரணை காரணங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களை போலீசார் இதுவரை வெளியிடவில்லை.