சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்த குற்றவாளிக்கு ஏழு ஆண்டுகள் சிறை

17 December 2025

தூத்துக்குடி பகுதியில் கடந்த 2024 ஆம் ஆண்டு 10 மற்றும் 11 வயது சிறுமிகள் இரண்டு பேரை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் கெவின் என்பவர் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டார். 

இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் இன்று இந்த வழக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா குற்றவாளிக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் 13 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட இரண்டு சிறுமிகளுக்கும் அரசு நிவாரண நிதியிலிருந்து 2 லட்சம் வீதம் மொத்தம் 4 லட்சம் இழப்பீடு வழங்கும் உத்தரவிட்ட தீர்ப்பு வழங்கினார்.