கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அரசுப் பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில், தமிழக அரசின் சார்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் , மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், நகர்மன்றத் தலைவர் திருநாவுக்கரசு, நகராட்சி ஆணையர் புஸ்ரா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சிவராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாணவிகளின் கல்விப் பயணத்திற்கு உறுதுணையாக இருக்கும் இத்திட்டம், அப்பகுதி மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
கொற்றவை செய்தியாளர் அ.ஐயப்பன்.