ஆபத்தை உணராத பள்ளி மாணவர்கள்
23 October 2025
ஆபத்தை உணராத பள்ளி மாணவர்கள்
விழுப்புரம் அருகே உள்ள பரசுரெட்டிபாளையம் மற்றும் மேட்டுப்பாளையம் இடையே உள்ள மலட்டாறு தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது.
பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் ஆபத்தை உணராமல் வெள்ள நீரில் கடந்து செல்கின்றனர்.
இதற்கு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-செய்தியாளர்.
ஆ.ஆகாஷ், விழுப்புரம்