இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ள டிட்வா புயலின் வேகம் தற்போது அதிகரித்துள்ளது. இந்த புயலின் காரணமாக இலங்கை பகுதிகளில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக கொழும்பு விமான நிலையத்தில் புயலின் காரணமாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இலங்கையில் சிக்கி இருக்கும் வெளிநாட்டினர் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதேபோன்று துபாயிலிருந்து இலங்கை வழியாக இந்தியா வருவதற்காக விமானத்தில் பயணம் செய்த சுமார் 300 இந்தியர்கள் கடந்த மூன்று நாட்களாக கொழும்பு பன்தர்நாயகே விமான நிலையத்தில் சிக்கியுள்ளனர்.
இந்த நிலையில் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் புயலின் காரணமாக நாளை வரை விமான சேவைகள் ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது....