கோவளத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையினரால் நடத்தப்பட்ட விழிப்புணர்வு முகாம்

01 November 2025

செங்கல்பட்டு மாவட்டம் கோவளத்தில் அக்டோபர் ( 30 ,31) இரண்டு நாட்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையினரால் நடத்தப்பட்ட மீனவர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தீயணைப்புத்துறை, மருத்துவத்துறை, மற்றும் கடற்படை துறையினரால் பயிற்சி பெற்ற அதிகாரிகள் கலந்து கொண்டு மீனவர்கள் அவசர கால நிலையான பேரிடர் காலங்களில் புயல் மற்றும் வெள்ளம், படகு தீ விபத்து, கடலில் மீன் பிடிக்கும் போது திடீரென மீனவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் எவ்வாறு செயல்பட வேண்டும் என விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் கோவளம் மற்றும் அதனை சுற்றியுள்ள மீனவ கிராமங்களான செம்மஞ்சேரி புது கல்பாக்கம் ,நெம்மேலிகுப்பம் ,சூளேரிக் காட்டுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்களும் கலந்து கொண்டு விழிப்புணர்வு பெற்றனர். மேலும் மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களுக்கும் துறையினரால் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது.


செய்தியாளர் 
A. Mohamed sha