திருமண மண்டபத்தில் மின்கசிவால் தீ விபத்து

25 October 2025

விழுப்புரம்: திருமண மண்டபத்தில் மின்கசிவால் தீ விபத்து


விழுப்புரம் மாவட்டம் அரியலூர் திருக்கை கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது ஜெனரேட்டர் வயரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ பரவியது. விருந்தினர்கள் பீதியடைந்து வெளியேறினர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

-செய்தியாளர்
ஆ.ஆகாஷ், விழுப்புரம்