இரண்டு குழந்தைகளை ஆற்றில் வீசி தந்தை தற்கொலை

19 November 2025

தெலுங்கானா மாநிலம் மாளிகைபுரம் பகுதியைச் சேர்ந்த துர்கா பிரசாத் (37) என்பவர் நாகவேணி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மோகித் (13) ஜான்வி (9) என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர். துர்கா பிரசாத் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் அவர் சொந்த ஊருக்கு வந்திருந்த போது இன்று தனது இரண்டு குழந்தைகளையும் கோதாவரி ஆற்றுப்பகுதிக்கு அழைத்துச் சென்று இரண்டு குழந்தைகளையும் ஆற்றுக்குள் வீசி கொன்றுவிட்டு துர்கபிரசாதம் ஆற்றுக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தவுடன் போலீசார் மூன்று பேரின் உடலையும் மீட்டனர். மேலும் மூன்று பேரில் உடலையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்....