விழுப்புரம்: மருமகனுக்காக தன்னுயிரை மாய்த்த மாமா!

07 December 2025

விழுப்புரம்: மருமகனுக்காக தன்னுயிரை மாய்த்த மாமா!

விழுப்புரம்: மேலக்கொந்தையை சேர்ந்த குமார் (53), மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது மருமகனை சென்று பார்த்து வந்துள்ளார். அதையொட்டி மனஉளைச்சலில் இருந்து வந்த அவர், அருகிலிருந்த வேப்பமரத்தில் தூக்கு போட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

செய்தியாளர் 
ஆ.ஆகாஷ், விழுப்புரம்