விழுப்புரம்: குளத்தில் மூழ்கி இளைஞர் பலி!

10 November 2025

விழுப்புரம்: குளத்தில் மூழ்கி இளைஞர் பலி!


விழுப்புரம்: வானூர் வட்டம், குயிலாப்பாளையம் வடக்குத் தெருவைச் சேர்ந்த மு.தமிழ்பிரியன்(28). திருமணமாகாத இவர், கொடைக்கானலில் தனியார் விடுதியில் வேலை பார்த்து வந்தார். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த தமிழ்பிரியன் கடந்த சனிக்கிழமை அங்குள்ள குளத்தில் குளித்துள்ளார். அப்போது குளத்தின் ஆழமான பகுதியில் சிக்கி உயிரிழந்தார். இதுகுறித்து ஆரோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.

செய்தியாளர் 
ஆ.ஆகாஷ், விழுப்புரம்