புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்த முதலமைச்சர்

08 January 2026

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) சார்பில் நடத்தப்படும் 49-வது சென்னை புத்தகக் கண்காட்சி இன்று (ஜனவரி 8) தொடங்கி, ஜனவரி 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதற்காக சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் 1,000 அரங்குகள் மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன.



இந்த புத்தகக் கண்காட்சியைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரிப்பன் வெட்டி முறைப்படி தொடங்கி வைத்தார்.


அதனைத் தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலையையும் அவர் திறந்து வைத்தார்.



நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர், "1977-ஆம் ஆண்டில் 13 அரங்குகள் எனத் தொடங்கப்பட்ட இந்த அறிவுப் பணி, தற்போது 49 ஆண்டுகளைக் கடந்து 1,000 அரங்குகள் (தற்போது 900-க்கும் மேற்பட்ட அரங்குகள் செயல்பாட்டில் உள்ளன) என்ற இமாலய வளர்ச்சி கண்டுள்ளது" எனக் குறிப்பிட்டுப் பேசினார்.