ஈரோட்டில் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி உள்ள

07 December 2025

ஈரோட்டில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் டிசம்பர் 16ஆம் தேதி விஜய் ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என தெரிவித்தார். மேலும் இதற்காக ஈரோடு வாரி மஹால் அருகே அனுமதி கேட்டுள்ளதாக தெரிவித்த அவர் அதற்கு அனுமதி மறுத்துள்ளதாக பத்திரிக்கை செய்திகள் வருகின்றன ஆனால் காவல்துறையிடம் நாங்கள் கேட்டபோது அனுமதி மறுத்துள்ளதாக இதுவரை கடிதங்கள் எழுதவில்லை என தெரிவித்துள்ளார்கள். இருந்தாலும் எச்சரிக்கையாக டோல்கேட் அருகே மாற்று இடத்திற்கும் அனுமதி கேட்டு கடிதம் வழங்க இருக்கிறோம் என செங்கோட்டையன் தெரிவித்தார்....