சட்டப்பேரவைத் தேர்தல்: திமுக - காங்கிரஸ் கூட்டணி நிலைப்பது சந்தேகம் என எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

15 February 2026

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி நீடிப்பது சந்தேகமே என்று தெரிவித்துள்ளார். ஆட்சியில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இது குறித்து திமுக உறுதியான முடிவு எடுக்காமல் இழுத்தடித்து வருவதால் அந்தக் கூட்டணி ஆட்டம் கண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும், திமுக ஆட்சியில் மின்கட்டணம், குடிநீர் வரி மற்றும் விலைவாசி உயர்வு விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளதாகவும், கடந்த ஐந்து ஆண்டுகளில் 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி மக்களைக் கடனாளிகளாக்கி விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார். விவசாயம், கல்வி என அனைத்துத் துறைகளிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், விளம்பரத்தை மட்டுமே நம்பி மு.க. ஸ்டாலின் ஆட்சி நடத்துவதாகவும் விமர்சித்த அவர், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் குடிமராமத்துப் பணிகள் உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்கள் மீண்டும் தொடங்கப்படும் என உறுதியளித்தார்.