ஜார்கண்ட் மாநிலம் ராம் கட் மாவட்டத்தில் உள்ள சிர்கா வனப்பகுதியில் நேற்று யானை தாக்கியதில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதுமட்டுமின்றி அந்த மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நேற்று யானைகளை வீடியோ செல்பி எடுக்க முயன்ற அமித் குமார் என்ற இளைஞரை யானை மிதித்து கொன்றது. இதேபோன்று ராஞ்ஜி மாவட்டம் ஜிண்டு கிராமத்திற்கு அருகே உள்ள வனப்பகுதியிலும் நேற்று இரவு யானை தாக்கி 36 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் ஒரே நாளில் யானை தாக்கி ஐந்து பேர் உயிரிழந்துள்ளதால், அப்பகுதியில் பெரும் சோகம் நிலவி வருகிறது.
மேலும் இதற்கு வனத்துறையினர் மற்றும் சம்பந்தப்பட்ட நிர்வாகம் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்கள் மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகளின் மிகப்பெரிய கோரிக்கையாக உள்ளது...