2030-க்குள் 33 சதவீத மின்சாரப் பேருந்துகள்: தமிழக அரசின் இலக்கு
17 February 2026
சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு 4.0 நிகழ்வில் உரையாற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின், வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டில் இயக்கப்படும் மொத்தப் பேருந்துகளில் 33 சதவீதத்தைப் பேருந்துகளை மின்சாரப் பேருந்துகளாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக உறுதி அளித்துள்ளார். தற்போது சென்னையில் 380 மின்சாரப் பேருந்துகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், கார்பன் உமிழ்வைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், மின் வாகனங்களுக்கான சாலை வரியிலிருந்து 2027-ஆம் ஆண்டு வரை விலக்கு அளிக்கப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இது தவிர, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களைக் கார்பன் சமநிலை மாவட்டங்களாக மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மாநிலம் முழுவதும் 5 லட்சம் சந்தன மரக்கன்றுகள் நடப்படும் என்றும் அவர் தெரிவித்தார். எதிர்கால பட்ஜெட்கள் அனைத்தும் காலநிலை மாற்ற நடவடிக்கைகளை உள்ளடக்கியதாகவே அமையும் என்று முதல்வர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.