SIR படிவங்களை ஒப்படைப்பதற்கான கால அவகாசம் டிச.11 வரை நீட்டிப்பு.

30 November 2025

SIR APPLICATION

எஸ் ஐ ஆர் படிவங்களை விநியோகிப்பதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 11ஆம் தேதி வரை நீட்டித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட SIR படிவங்களை ஒப்படைப்பதற்கான கால அவகாசம் டிச.11 வரை நீட்டிப்பு. டிச.4ம் தேதி இறுதி நாளாக முன்பு கூறப்பட்டிருந்தது. வரைவு வாக்காளர் பட்டியல் டிச. 16, இறுதி வாக்காளர் பட்டியல் பிப்14ம் தேதி வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு. இது தொடர்பாக தற்பொழுது எஸ் ஐ ஆர் நடைமுறை மேற்கொள்ளப்படும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் தேர்தல் ஆணையர்களுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

செய்தியாளர்:
வினோத். R
கும்மிடிப்பூண்டி
கொற்றவை நியூஸ்.