இந்தியாவில் 6 மாநில இடைத்தேர்தல் தேதிகளை அறிவித்தது தேர்தல் ஆணையம்

15 March 2026

இந்திய தேர்தல் ஆணையம் இன்று (15/03/2026) கோவா, குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகிய 6 மாநிலங்களில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அட்டவணையை வெளியிட்டது. அந்தந்தத் தொகுதிகளில் பணியாற்றி வந்த சட்டமன்ற உறுப்பினர்களின் மறைவைத் தொடர்ந்து இந்த இடங்கள் காலியாகின. இந்த இடைத்தேர்தல்கள் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளன. முதல் கட்டமாக ஏப்ரல் 9-ம் தேதி கோவா (பொண்டா), கர்நாடகா (பாகல்கோட், தாவணகெரே தெற்கு), நாகாலாந்து (கோரிடாங்) மற்றும் திரிபுரா (தர்மநகர்) ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெறும். இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 23-ம் தேதி குஜராத் (உம்ரேத்) மற்றும் மகாராஷ்டிரா (ராகுரி, பார்மதி) ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடத்தப்படும். அனைத்துத் தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதே நாளில் தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.