கள்ளக்குறிச்சி (நவம்பர் 1): கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில், இன்று கள்ளக்குறிச்சி (SC) சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மேற்பார்வையாளர்களுக்கான தீவிரச் சுருக்கத் திருத்தம் பணி தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் தயாரிப்பின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய கட்டுமான வழிகாட்டுதல்கள் மற்றும் பணிகள் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும், வாக்காளர் பட்டியலில் பிழைகள் இல்லாத வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் திரளாக கலந்துகொண்ட இந்தக்கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
கொற்றவை செய்தியாளர், ஐயப்பன்