நவம்பர் 7: கள்ளக்குறிச்சி மாவட்டம், 79-சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கல்வராயன்மலை ஒன்றியம், மாவடிப்பட்டு கிராமத்தில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் சிறப்புத் தீவிரத் திருத்தம் தொடர்பான படிவங்கள் விநியோகிக்கும் பணிகளை, மாவட்டத் தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், இ.ஆ.ப., இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, படிவங்கள் விநியோகிக்கும் செயல்முறைகள், பதிவேடுகள் முறையாகப் பராமரிக்கப்படுகிறதா என்பன உள்ளிட்ட பல்வேறு விவரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆலோசனை செய்தார். மேலும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினார். இந்த ஆய்வின்போது, தொடர்புடைய அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
கொற்றவை செய்தியாளர், அ. ஐயப்பன்.